

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குறிப்பும் எதைக் குறிக்கிறது என சரியாக சொல்லுங்கள் பார்ப்போம்.
1. மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கும்; குதிரைக்கும், முயலுக்கும்கூட பிடிக்கும். நான் பார்வை அதிகரிக்க உதவுவேன். நான் யார்?
2. நான் தேவதைகளுக்கும், தவளைகளுக்கும் குடையாக இருப்பேன். நேற்று முளைத்தவன் என்று என்னை ஏளனமாகப் பேசுவார்கள்.
3. என்னிடம் காடுகள் இருக்கின்றன. ஆனால், மரங்கள் இல்லை. என்னிடம் ஆறுகள் இருக்கின்றன. ஆனால், தண்ணீர் இல்லை. என்னிடம் சாலைகள் இருக்கின்றன. ஆனால், கார்கள் இல்லை. நான் யார்?
4. நான் பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிறங்கள் கலந்து இருப்பேன். தாகத்தைத் தணிப்பேன்.
5. தண்ணீரில் நான் அழுதாலும் தெரியாது. புழுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
விடை:
1. கேரட்
2. காளான்
3. வரைபடம்
4. தர்பூசணி
5. மீன்
தொகுப்பு: என். கெளரி