

1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
2. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
3. எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?
4. ஆடி ஓய்ந்த பின் அம்மணி வருவாள். அவள் யார்?
5. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?
6. எலும்பு இல்லாத மனிதன், கணுவில்லாத மரத்தில் ஏறுகிறான். அது என்ன?
7. காடு சிறுகாடு; அங்கே கூட்டம் பெருங்கூட்டம். அது என்ன?
8. இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
9. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல, இடியோசை தரும் வானமும் இல்லை. அது என்ன?
- க. ரம்யா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பன்னம்பாறை, சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம்.
விடைகள்:
1. நாக்கு 2. சீப்பு 3. தோசை 4. ஆவணி 5. விளாம்பழம் 6. பேன் 7. தலைமுடி பேன்கள் 8. கடிகாரம் 9. வானவெடி