மின்னல் வருவது எதனாலே

மின்னல் வருவது எதனாலே
Updated on
1 min read

மழையைப் பற்றிச் சொல்லும் இந்தக் குழந்தைப் பாடலைத் தெரியுமா?

வானத்திலே திருவிழா

வழக்கமான ஒரு விழா

இடியிடிக்கும் மேளங்கள்

இறங்கிவரும் தாளங்கள்

மின்னல் ஒரு நாட்டியம்

மேடை வான மண்டபம்

என்று தொடங்கும் இந்தப் பாடலைப் படிக்கும்போதே மழையில் நனைந்துவிட்டது போல தோன்றுகிறதுதானே. சரி, இப்போது மின்னலுக்கு வருவோம். இந்த மின்னல் ஏன் தோன்றுகிறது தெரியுமா? அதற்குக் கொஞ்சம் இயற்பியலின் துணை தேவை. மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போதோ, வேறு பல காரணங்களாலோ மின்னூட்டம் பெற்றுவிடும். எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது காற்றின் வழியாக மின் பரிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகிற ஒளிக்கீற்றுதான் மின்னல். இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. இடிச்சத்தம் அதற்குப் பிறகுதான் நம் காதுகளை அடைகிறது.

வீணாகும் மின்சாரம்

மின்னல் தோன்றுவதால் ஏற்படும் மின்சாரத்தைக் கொண்டு ஒரு நகரத்தின் ஒரு ஆண்டு முழுவதற்குமான மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஆனால் மின்னலின் மின் சக்தியைச் சேமிக்கும் ஆற்றல், நம்மிடம் இல்லாததால் அது வீணாகப் போகிறது. வானில் தோன்றும் மின்னல் மரங்களின் வழியே நிலத்தில் பாய்ந்துவிடும். விலங்குகளும், மனிதர்களும்கூட மின்னல் தாக்கி இறக்க நேரிடுகிறது. மின்னல் ஏற்படும் பகுதியைவிட உயரத்தில் விமானங்கள் பரப்பதால், அவை மின்னலால் பாதிப்படைவதில்லை. இருந்தாலும் சில சமயம் ஆகாய விமானங்களும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in