மழலை மதிப்புரை: கதைகள் சொல்லும் பாடங்கள்

மழலை மதிப்புரை: கதைகள் சொல்லும் பாடங்கள்
Updated on
1 min read

ஒவ்வொரு வருஷமும் சென்னையில நடக்குற புத்தகக் கண்காட்சிக்கு அம்மாவும், அப்பாவும் என்னை கூட்டிட்டுப் போவாங்க. எனக்குப் பிடிச்ச நிறைய புத்தகங்கள நான் வாங்குவேன். அப்படி நான் வாங்குன புத்தகத்துல ‘ஏழு நிறப் பூ’ன்ற கதை தொகுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்தப் புத்தகம் எனக்கு ஏன் பிடிச்சிருந்துச்சு தெரியுமா?

முதல்ல இந்தப் புத்தகத்தோட தலைப்பைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. அதனால, இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிச்சு வாங்குனேன். ஒரு பூவோட ஒவ்வொரு இதழுக்கும் ஒரு சக்தி இருக்குது, அந்த சக்தி எப்படி வத்துச்சு, எதுக்காக அந்த சக்தி?

இப்படி நிறையக் கேள்விகளுக்கு இந்தக் கதை புத்தகத்துல விடை இருக்கு. இதேபோல எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு முட்டாள், எப்படி ஒரு நாட்டுக்கே ராஜா ஆனார்ன்னு இன்னொரு கதை. இப்படிச் சுவையா 13 கதைகள் இந்தப் புத்தகத்துல இருக்கு. இது ரஷ்ய நாட்டு சிறுவர் கதைகளோட தொகுப்பு. லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், அலெக்ஸி டால்ஸ்டாய்ன்னு முன்னணி எழுத்தாளர்களோட கதைகள் இந்தப் புத்தகத்துல இருக்கு. தமிழ்ல யூமா வாசுகி அழகா மொழிபெயர்த்து எழுதியிருக்காங்க. ஒவ்வொரு கதையிலும் காமெடி, விறுவிறுப்பு, நல்ல கருத்துன்னு எல்லாமும் கலந்து நல்ல கலவையில இந்தப் புத்தகம் இருக்கு.

என்ன நண்பர்களே! உங்களுக்கும் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசையா? சீக்கிரம் வாங்கிப் படிச்சுப் பாருங்களேன்.

உங்களுக்குப் பிடித்த நூல் எது?

குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in