

நாரையைப் பார்த்திருக்கிறீர்களா? நீர் நிலைகளில் நின்றுகொண்டு மீனைப் பிடித்துச் சாப்பிடக் காத்திருக்கும். கரண்டி போலவே வாய் இருக்கும் நாரையை வீட்டிலேயே செய்து பார்க்கலாம் தெரியுமா?
தேவையான பொருள்கள்:
l பிளாஸ்டிக் கரண்டிகள் -2 l ஒரு ஜோடிக் கத்தரிக்கோல்கள் l கறுப்பு மை பேனா l பசை.
செய்முறை:
1. படத்தில் காட்டியுள்ளபடி ஒரு பிளாஸ்டிக் கரண்டியின் கைப்பிடிப் பகுதியில் நிறமிட்ட பகுதியை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் புள்ளிகளிட்ட பகுதியில் கீழ்ப் பக்கத்திலும் கழுத்துப் பக்கத்திலும் வளைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நாரையின் தலை, கழுத்து, உடம்பு ஆகிய பகுதிகளை உருவாக்கும். (நாரையின் கண்களை வரைந்துகொள்ள மறந்துவிடாதீர்கள்.)
2. இரண்டாவது கரண்டியைப் படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிக்கொள்ளுங்கள். கழுத்துப் பகுதியைத் தனியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நாரை நின்றுகொள்ள உதவும் ஸ்டாண்ட். கரண்டியின் கைப்பிடிப் பகுதியைப் படத்தில் காட்டியுள்ளபடி நான்காகப் பிரித்து கொள்ளுங்கள். புள்ளிகளிட்ட பகுதியை மடித்துக்கொள்ளுங்கள். இதுதான் நாரையின் கால்கள்.
3. இப்போது நாரையின் கால்களை உடம்புடன் ஒட்டி பின்னர் மொத்த நாரையையும் ஸ்டாண்ட் மீது ஒட்டிக்கொள்ளுங்கள்.
இனியென்ன, நாரையை வைத்து விளையாடுங்கள் குழந்தைகளே.