

சில வரவேற்பறைகளில் விசித்திரமான ஸ்கிரீன் களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஸ்கிரீனை இடது புறமாகப் பார்த்தால் ஏதாவது ஒரு படமும், வலதுபுறம் சென்று பார்த்தால் இன்னொரு படமும் தெரியும். சில சமயம் இரண்டு படங்களும் ஒன்றாகத் தோற்றமளிக்கும். அதேபோன்ற ஒரு விசித்திரமான அட்டையை நீங்களும்கூடச் செய்யலாம். கோடை விடுமுறையில் உள்ள நீங்கள் அந்த விசித்திர அட்டையைச் செய்யத் தயாரா?
தேவையான பொருட்கள்:
தடிமனான அட்டை, கத்தரிக்கோல்
எப்படிச் செய்வது?
1. முதலில் படம் 1 மற்றும் 2 ஆகியவற்றைத் தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றைத் தடிமனான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
2. பிறகு கத்தரிக்கோல் உதவியுடன் படம் 3-ல் காட்டியபடி A முதல் J வரையிலான பத்து கோடுகளை வெட்டிக்கொள்ளுங்கள்.
3. பின்பு படம் 4-ல் காட்டியபடி படம் 2-ஐ எடுத்துக் கீழ்ப்புறமாக J கோட்டில் நுழையுங்கள். அப்புறம், H கோட்டின் வழியாக வெளியே இழுங்கள். இப்படி மாறிமாறி செய்யுங்கள்.
4. இப்படி எல்லாக் கோடுகளின் வழியாகவும் படங்களை விட்டு எடுங்கள்.
5. இப்போது படம் 2-ஐ இடதுபுறமாக இழுங்கள். புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் இருப்பது போலத் தெரியும்.
இதைச் செய்து காட்டி உங்கள் நண்பர்களை அசத்தலாமே!