நான்தான் காடு

நான்தான் காடு
Updated on
1 min read

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே!

நாட்டில் ஓடும் நதிகளை - கொடுப்பதும்

நான்தானே நான்தானே

காவியம் சொல்லும் காகிதம் – கொடுப்பதும்

நான்தானே நான்தானே!

மண்ணின் வளத்தை உயர்த்தி – கொடுப்பதும்

நான்தானே நான்தானே

மழையை மண்ணில் நிற்கச் – செய்வதும்

நான்தானே நான்தானே!

உயிரைக் காக்கும் மூலிகை – கொடுப்பதும்

நான்தானே நான்தானே

உயிர் கோளத்தில் காப்பது – உன்னை

நான்தானே நான்தானே!

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே!

- மொ.பாண்டியராஜன் மதுரை.3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in