நீங்களே செய்யலாம் - குட்டியூண்டு ஸ்டூல்

நீங்களே செய்யலாம் - குட்டியூண்டு ஸ்டூல்
Updated on
2 min read

உங்கள் வீட்டில் ஸ்டூல் இருக்கிறதா? அதை உட்காருவதற்கும், உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்கவும் பயன்படுத்துவோம் அல்லவா? அதைப் போன்ற விளையாட்டு ஸ்டூல் ஒன்றை வீட்டிலேயே செய்து பார்க்கிறீர்களா?

தேவையான பொருள்கள்:

# தடிமனான தாள்

# 12 தீக்குச்சிகள் (அனைத்து தீக்குச்சியிலும் தலைப் பகுதியை ஒடித்து எடுத்துவிடுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி மூன்று விதமான நீளங்களில் நான்கு நான்காகப் பிரித்துக் கொள்ளுங்கள்)

# கத்தரிக்கோல்

# பசை.

செய்முறை:

1 படத்தில் காட்டியுள்ளபடி தடிமனான தாளில் சதுர வடிவத்தில் ஒரு துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

2 மிகக் குறைந்த நீளம் கொண்ட தீக்குச்சிகளைக் கொண்டு ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் இந்தச் சட்டத்தில், தடிமனான தாளிலிருந்து வெட்டி எடுத்த சதுர வடிவத் துண்டை ஒட்டிக்கொள்ளுங்கள்.

3 இப்போது மிக அதிக நீளம் கொண்ட தீக்குச்சிகளைப் பயன்படுத்தி ஸ்டூலின் கால்களை உருவாக்குங்கள். அடுத்ததாக நடுத்தரமான நீளம் கொண்ட தீக்குச்சிகளின் மூலம் ஸ்டூலின் அடிப்பகுதியில் வரும் சட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது விளையாட அருமையான ஸ்டூல் கிடைத்து விட்டதா? இதை வைத்து விளையாடுங்கள். ஆனால், ஆசையாக அதில் ஏறி உட்கார்ந்துவிடாதீர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in