

கீழே 10 குறிப்புகள் உள்ளன. அவை ஒரு நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது எனக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். முதல் ஐந்து குறிப்புகளிலேயே கண்டுபிடித்துவிட்டால் இரட்டைப் பாராட்டு.
1. ஐரோப்பாவின் நடுவே ஒரு நாடு.
2. ரஷ்யாவை விட்டுவிட்டால் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக மக்கள்தொகை கொண்டது இந்த நாடுதான்.
3. இதன் மொழி ஆங்கிலம் போன்ற எழுத்துகளைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலியைக் கொண்டது.
4. இந்த நாட்டை ஆட்சி செய்வது (Chancellor) ஒளிப்படத்திலுள்ள பெண்மணிதான்.
5. இன்சுலின், தானியங்கி கால்குலேட்டர், டீசல் இன்ஜின். ஜெட் இன்ஜின், வாக்மேன், கிளாரினெட் போன்ற அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.
6. பிரபல இசை மேதை பீத்தோவன் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
7. இதன் மிக நீளமான ஆறு ரைன். இதன் நீளம் 1,232 கிலோ மீட்டர்.
8. ஒளிப்படத்தில் காணப்படும் கார் பந்தய வீரர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
9. உலகப் போருக்குக் காரணமான சர்வாதிகாரி இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான்.
10. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரு நாடுகள் ஒன்றாகிய தேசம் இது.