நடன பொம்மை - நீங்களே செய்யலாம்

நடன பொம்மை - நீங்களே செய்யலாம்
Updated on
2 min read

பொம்மை என்றால் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அழகாக பாலே நடனமாடும் பெண்ணைப் போன்ற பொம்மையைச் செய்து பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

சிறிய பென்சில், பென்சில் சீவும்போது கிடைக்கும் சீவல் துணுக்குகள், மணி, இரண்டு தீக்குச்சிகள், தடிமனான அட்டை, பளபள காகிதம், ஸ்கெட்ச் பேனா, குண்டூசி, கத்தரி, பசை.

செய்முறை:

1 சிறிய பென்சிலின் இரு முனைகளை நன்றாகச் சீவி, அந்த சீவல் துணுக்குகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

2 பென்சில் சீவல் துணுக்களைப் பயன்படுத்தி இரு கூம்பு வடிவத்தைப் படத்தில் காட்டியது போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கூம்பு வடிவங்களை இரண்டு தீக்குச்சிகளில் இணைத்துக்கொள்ளுங்கள். பென்சிலின் நடுவே பெண்ணின் பாவாடை போன்று பென்சில் சீவல் துணுக்கை ஒட்டிக்கொள்ளுங்கள். மேலே இரண்டு புறங்களிலும் படத்தில் காட்டியுள்ளது போல் தீக்குச்சிகளை இணைத்துக்கொள்ளுங்கள். இவை பெண்ணின் இரண்டு கைகள் போல் செயல்படும். நடனப் பெண்ணின் தலையை உருவாக்க மணியைப் பொருத்திக்கொள்ளுங்கள்.

3 தடிமனான அட்டையிலிருந்து படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு ஸ்டாண்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். இதன் மேலே நடனப் பெண்ணைத் தொங்கவிடும் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தடிமனான அட்டையில் சதுர வடிவ அழகிய டிசைனை வரைந்து அந்த அட்டையை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஸ்டாண்டின் அடிப்பகுதியில் ஒட்டிவிடுங்கள்.

4 நடனப் பெண்ணைத் தொங்கவிடும் மேல் பகுதியில் ஒரு துளையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் குண்டூசியை நுழைத்து தொங்கவிடுங்கள். குண்டூசியின் முனைப் பகுதியில் நடனப் பெண்ணின் தலைப் பகுதியைப் பொருத்தி தொங்கவிடுங்கள்.

5 இரண்டு முக்கோண வடிவங்களைப் பளபள காகிதத்தி லிருந்து வெட்டி எடுத்து அவற்றை நடனப் பெண்ணின் இரண்டு கைகளிலும் பொருத்திவிடுங்கள். இப்போது ஒரு மின்விசிறிக்குக் கீழே இந்த நடனப் பெண்ணைக் கொண்டு வைத்துவிடுங்கள். காற்றுக்கு ஏற்ப அழகாக பாலே நடனமாடுவாள் அந்தப் பெண்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in