Last Updated : 20 Jul, 2016 12:18 PM

 

Published : 20 Jul 2016 12:18 PM
Last Updated : 20 Jul 2016 12:18 PM

நாட்டுக்கொரு பாட்டு - 15: பேர் சொல்லும் பேருந்துப் பாட்டு!

ஆஸ்திரேலியா ஒரு தீவு தேசம். ஒரு கண்டமும்கூட. பல அரிய வகை விலங்குகள் இருக்கும் அழகான தேசம். ‘கங்காரு' தேசம் என்றும் சொல்லிவிடலாம்.

ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ 250 உள்ளூர் மொழிகள் இங்கு பேசப்பட்டுவந்ததாகக் கூறுகிறார்கள். சிறிய ஆறு பகுதிகள் இணைக்கப்பட்டு 1901 ஜனவரி 1-ல் ஆஸ்திரேலியா உருவானது. ‘ஆஸ்திரேலியா' என்றால் லத்தீன் மொழியில் ‘தெற்குப் பகுதி' என்று பொருள்.

1788-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி துறைமுகத்துக்கு வந்தன. ஆளுநர் ஆர்தர் ஃபிலிப் பிரிட்டனின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நாளே ஆஸ்திரேலிய தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தை எழுதி இசையமைத்தவர், ஸ்காட்லாந்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் பீட்டட் டோட்ஸ் மெக்கார்மிக். இவர் 21 வயதில் சிட்னிக்கு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், உள்ளூர் சர்ச்சுகளில் சமூகப் பணி செய்துவந்தார்.

அப்படி வேலை செய்யும்போது வாய் விட்டு சத்தமாகப் பாடுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் பாடியதை சர்ச் பாதிரியார் கேட்டு, அவரை சர்ச் இசைக் குழுவில் சேர்த்துவிட்டார். ஒரு முறை கண்காட்சி அரங்கம் ஒன்றுக்கு சென்றார் மெக்கார்மிக். அங்கே பல நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கென தேசிய கீதம் இல்லாததால் வருத்தமடைந்தார்.

வீட்டுக்குப் பேருந்தில் திரும்பியபோது, பாடல் ஒன்றை எழுத ஆரம்பித்தார். வீட்டுக்கு வந்ததும் அந்தப் பாடலுக்கு இசையும் அமைத்தார். 1878 சிட்னியில் நடந்த ‘ஹைலேண்ட் சொசைட்டி' விழாவில் இந்தப் பாடல் பிரபலம் ஆனது. கொஞ்சம் பாடல் திருத்தப்பட்டு 1901-ல் 10 ஆயிரம் பேர் பாடினார்கள். இந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்பது குறித்து 1977-ல் பொதுமக்களிடம் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி இந்தப் பாடல் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக 1984-ல் அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கீதம் இப்படி ஒலிக்கும்:

ஆஸ்திரேலியன்ஸ் ஆல் லெட் அஸ் ரிஜாய்ஸ்

ஃபார் வி ஆர் யங் அண்ட் ஃப்ரீ

வி ஹேவ் கோல்டன் ஸாயில், அண்ட் வெல்த் ஃபார் டாயில்

அவர் ஹோம் இஸ் கிர்ட் பை ஸீ

அவர் லேண்ட் அபௌண்ட்ஸ் இன் நேச்சர்ஸ் கிஃப்ட்ஸ்

ஆஃப் பியூட்டி ரிச் அண்ட் ரேர்

இன் ஹிஸ்டரிஸ் பேஜ், லெட் எவரி ஸ்டேஜ்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்

இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.

பினீத் அவர் ரேடியண்ட் சதர்ன் க்ராஸ்

வி வில் டாய்ல் வித் ஹார்ட்ஸ் அண்ட் ஹேண்ட்ஸ்

டு மேக் திஸ் காமன்வெல்த் ஆஃப் அவர்ஸ்

ரினௌண்ட் ஆஃப் ஆல் தி லேன்ட்ஸ்

ஃபார் தோஸ் ஹூ ஹேவ் கம் அக்ராஸ் தி ஸீஸ்

வி ஹேவ் பௌண்ட்லெஸ் ப்ளெய்ன்ஸ் டு ஷேர்

வித் கரேஜ் லெட் அஸ் ஆல் கம்பைன்

டு அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்

இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்

அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.

பாடலின் உத்தேச பொருள்:

ஆஸ்திரேலியர்கள் நாம் அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம்.

ஏனெனில், நாம் இளைமையானவர்கள்; சுதந்திரமானவர்கள்.

நம்மிடம் பொன் போன்ற மண் உண்டு; உழைப்பதற்கு செல்வம் உண்டு.

நமது நிலம், கடலால் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நமது நிலம், இயற்கையின் வெகுமதிகளால் நிரம்பி இருக்கிறது.

வளமையான அபூர்வமான அழகாலும்.

சரித்திரத்தின் பக்கங்களில் ஒவ்வொரு நிலையிலும் நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

சந்தோஷமான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக

நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

ஒளிவீசும் நமது தெற்கு சந்திப்புக்குக் கீழே

நமது இதயங்களாலும் கரங்களாலும் கடுமையாக உழைப்போம் -

இந்த நம்முடைய ‘காமன்வெல்த்'ஐ

எல்லா நிலங்களிலும் கீர்த்தி வாய்ந்ததாய் செய்ய

கடல்களைக் கடந்து வந்தவர்களுக்குப் பகிர்ந்துகொள்ள, எல்லையில்லா சமவெளிகளைக் கொண்டுள்ளோம்.

துணிவுடன் நாம் எல்லாரும் ஒன்று சேர்வோமாக

நியாயமான ஆஸ்திரேலியாவை முன்னேற்றுவதற்கு;

மகிழ்ச்சியான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக.

நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.

- மெக்கார்மிக்

(தேசிய கீதம் ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x