

விலங்குக் காட்சிச் சாலைக்குப் போகும்போது நீங்கள் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்திருப்பீர்கள். வீட்டில் ஒட்டகச்சிவிங்கி பொம்மையும் வைத்திருப்பீர்கள். நீங்களே ஒட்டகச்சிவிங்கியைச் செய்து பார்க்கத் தயாரா?
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு இரண்டு (ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது)
2. ஐஸ்கிரீம் குச்சிகள் ஐந்து
3. அடர் பிரவுன் கலர் ஸ்கெட்ச் பேனா
5. தீக்குச்சிகள் இரண்டு
6. சிறிய சணல் கயிறு, ஒரு குண்டூசி.
செய்முறை:
1. படம் 1-ல் உள்ளது போல ஸ்கெட்ச் பேனாவால் பெரிய உருளைக் கிழங்கில் திட்டுகளை வரையுங்கள்.
2. படம் 2-ல் காட்டியது போலச் சிறிய உருளைக் கிழங்கில் சிறிதளவுக்குத் திட்டுகளை வரையுங்கள். அதில் கண், வாய் ஆகியவற்றையும் மறக்காமல் வரைந்துகொள்ளுங்கள். ஐஸ்கிரீம் குச்சிகளில் ஒன்றை எடுத்து அதிலும் படத்தில் காட்டியபடி திட்டுகளை வரையுங்கள்.
3. நான்கு ஐஸ்கிரீம் குச்சிகளையும் கிழங்கில் செருகுங்கள் (படம் 3). இவை ஒட்டகச்சிவிங்கியின் கால்கள்.
4. படம் 4-ல் காட்டியது போலத் திட்டுகள் வரைந்து ஐஸ்கிரீம் குச்சியைச் செருகுங்கள். இதுதான் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து.
5. கழுத்தின் மேல் பகுதியில் சிறிய உருளையைச் செருகுங்கள் (படம் 5). இதுதான் தலை.
6. படம் 6-ல் காட்டியது போல இரண்டு தீக்குசிகளைப் பாதிப் பாதியாக உடைத்து மேல் பகுதியைச் சிறிய கிழங்கில் செருகுங்கள். இது ஒட்டகத்தின் கொம்பு. ஒரு சிறிய அட்டையில் காது போல வெட்டி, அதைப் படத்தில் உள்ளது போல ஒட்டுங்கள். சணல் கயிற்றைக் குண்டூசியின் உதவியுடன் கிழங்கின் பின்புறம் குத்துங்கள். இதுதான் வால்.
இப்போது நீங்கள் செய்த ஒட்டகச் சிவிங்கி தயார்.