Published : 29 Mar 2017 10:01 AM
Last Updated : 29 Mar 2017 10:01 AM

உலகின் மிகப் பெரிய பறவை!

பறவைகளில் மிகப் பெரியது தீக்கோழி என்றழைக்கப்படும் நெருப்புக்கோழி. அந்தப் பறவை பற்றிய சுவையான தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

> நெருப்புக்கோழிகளில் 3 இனங்கள் உள்ளன. இந்தப் பறவை ஏழு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரும். சுமார் 130 கிலோ எடை வரையில் இருக்கும்.

> சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழி எலும்புகளின் படிவங்கள் கிடைத்துள்ளன.

> ஆண் நெருப்புக்கோழிகள் கறுப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழிகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

> நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டுமே இருக்கும்.

> நெருப்புக்கோழியால் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு ஓட முடியும். மனிதரைக்கூடச் சுமந்துகொண்டு ஓடும் அளவுக்கு வலுவுள்ளது. ஆனால், இந்தக் கோழிக்குப் பறக்கத் தெரியாது.

> பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், சிறிய ஊர்வன இனங்களை நெருப்புக்கோழி விரும்பி சாப்பிடும்.

> கும்பல் கும்பலாகக் காணப்படும் நெருப்புக்கோழிகளில் பெண் நெருப்புக்கோழிகளே தலைமை வகிக்கும்.

> நெருப்புக்கோழிகள் வால் பகுதியை ஆட்டியும், தலையை அசைத்தும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

> உலகிலேயே மிகப் பெரிதாக முட்டை இடுவது நெருப்புக்கோழிகள்தான். இந்த முட்டை 2 டஜன் கோழி முட்டைகளுக்குச் சமம்.

> முட்டையிலிருந்து 40 - 42 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

> நெருப்புக்கோழியின் ஆயுள் காலம் சராசரியாக 45 ஆண்டுகள்.

> உலகமெங்கும் சுமார் 20 லட்சம் நெருப்புக்கோழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

தகவல் திரட்டியவர்: எஸ். சோழராஜன், 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x