

கண்டுபிடி
ஒட்டகச்சிவிங்கியின் தலையையும் உடலையும் சரியாகப் பொருத்தங்களேன்.
வார்த்தைத் தேடல்
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களின் பெயர்களும் இந்திய விடுதலைப் போராட்டத்தை நினைவுப்படுத்தும் சில இடங்களும் இந்த எழுத்துக் குவியலில் ஒளிந்துகிடக்கின்றன. அந்த வார்த்தைகளை மேலே, கீழே, குறுக்கே, இடது, வலதாகத் தேடி வட்டமிடுங்களேன்.
பழ சுடோகு
எல்லாப் பழங்களும் ஒரே வரிசையில் வருமாறும் ஒரேபழம் அருகருகே வராதபடியும் காலிக் கட்டங்களை நிரப்புங்களேன்!
விடுகதை
1. பச்சைக் குடையழகி; சமையலுக்கு வேண்டியவள், சற்றே அலற வைப்பாள். அது என்ன?
2. அன்று மலரும் பூ, எல்லோரையும் கவரும் பூ, கையில் எடுக்க முடியாத பூ. அது என்ன?
3. அழகான பூ, அருகிலோ ஆபத்து. அது என்ன?
4. அணையா விளக்கு. ஆனால், பகலிலும் எரி விளக்கு. அது என்ன?
5. தாளத்தோடு ராகத்தோடு கரை வழிப் பயணம். அது என்ன?
6. அண்ணன், தம்பி ஐவர். ஒவ்வொருவரும் ஒரு உயரம். அவை என்ன?
7. காய் அவள், பழுப்பாள் என்று பார்த்தால், வெடிக்கிறாள். அது என்ன?
8. உயிர் உள்ளவரை, இரவும், பகலும் இவள் விழித்திருப்பாள். அது என்ன?
9. பச்சை நிறத்தழகி, பவளவாய் சொல்லழகி, வீட்டிலும் காட்டிலும் இருப்பாள். அது என்ன?
10. கோபத்துக்கு வாயைக் காட்டுவான்; நன்றிக்கு வாலைக் காட்டுவான். அது என்ன?
விடுகதை போட்டவர்: எல். ஷெர்லி,
8-ம் வகுப்பு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.