

படம் வரையப் பயன்படும் பெயிண்ட் பிரஷ்ஷை தமிழில் தூரிகை என்று சொல்வார்கள். அதை வைத்து அணில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய தூரிகை, பச்சை நிற மார்பிள் பேப்பர், சாம்பல் வண்ண சார்ட் பேப்பர், டிரேசிங் பேப்பர், பென்சில், பெயிண்ட், கார்ட்போர்டு அட்டை, கத்தரிக்கோல், பசை
செய்முறை:
1. சார்ட் பேப்பரை இரண்டாக மடிக்கவும். அதன் மீது டிரேசிங் பேப்பரை வைத்து அணில் படத்தை வரைந்து கொள்ளவும். வரைந்த உருவத்தைக் கத்தரிக்கோலால் வெட்டவும். சார்ட் பேப்பரை மடித்திருப்பதால் உங்களுக்கு இரண்டு அணில் உருவங்கள் கிடைக்கும்.
2. அணிலுக்குக் கண் வரைந்து, முதுகின் மேல் கோடுகள் வரையவும்.
3. பச்சைநிற மார்பிள் பேப்பரை, நீளவாக்கில் இரண்டாக மடித்து அதன் மீது படத்தில் காட்டியிருப்பது போல இலைகள் வரையவும். வரைந்ததை வெட்டியெடுத்தால் இலைகளுடன் கூடிய கொடி கிடைத்துவிடும்.
4. தூரிகையில் வண்ணம் பூசப் பயன்படும் இழைகள் கொண்ட பகுதியின் இரண்டு பக்கமும் இரண்டு அணில்களை ஒட்டவும். கருப்பு இழைகள், அணிலின் வால் போல அழகாகத் தோன்றும்.
5. தூரிகையின் கைப்பிடி முழுக்க, கொடியைச் சுற்றி ஒட்டவும்.
6. தூரிகையைப் பெரிய கார்ட்போர்டு அட்டையில் ஒட்டிவிட்டால், அணில் மரத்தில் ஏறுவது போலத்தோன்றும்.