

இருண்ட மேகம் திரண்டபோது
இனிய மயில் ஒன்று வருகுது!
உருண்டையான புள்ளிகளோடு
ஓவியத் தோகை விரியுது!
கெட்டி நீலக் கழுத்துகொண்ட
கோழி போன்றே இருக்குது!
கொட்டிவிட்ட வண்ணம் தோகையில்
கோலம் போட்டுச் சிரிக்குது!
தலையின் மீது கிரீடம் தரித்து
தாவித்தாவி ஆடுது!
'பறவை உலகுக்கு நானே ராஜா' என்று
உவந்து மயிலும் பாடுது!
‘என் போல் பறவை ஏதுவும் உண்டோ'
என்றே அதுவும் கேட்குது!
கண்ணை உருட்டி காலை வளைத்து
களிப்பு நடனத்தைக் காட்டுது!
‘அழகுப் பறவை நானே! ' என்று
ஆடி மயிலும் அகவுது!
தேசியப் பறவை ஆகிவிட்டேனென
உற்சாகத்தில் மகிழுது!
- ரமண ராஜசேகர், காரைக்குடி