

ஒரு முட்டை ஓட்டிலிருந்து சேவலை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
மஞ்சள், வெள்ளைக் கரு நீக்கப்பட்ட முட்டை ஓடு (நன்கு கழுவி காய்ந்தபின்), வெள்ளைப் பசை, கறுப்பு மார்க்கர் பேனா, சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு வண்ண காகிதம் (கனமானது), ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு பிளாஸ்டிக் மூடி, கத்தரிக்கோல், பென்சில்
செய்முறை
படம் 1-ல் உள்ளதுபோல் ஆரஞ்சு பிளாஸ்டிக் மூடியின் உள்ளே முட்டையின் ஓட்டை வெள்ளை பசையால் கவிழ்த்து ஒட்டி, காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
படம் 2 மற்றும் 3-ல் இருப்பதுபோல் சேவல் றெக்கைக்காக வெள்ளைத்தாளில் வரைந்து வெட்டி எடுத்து, சின்ன றெக்கையைப் பெரிய றெக்கைமேல் ஒட்டிக் காயவைக்கவும் (நான்கு றெக்கைகள்).
படம் 4 மற்றும் 5-ல் உள்ளதுபோல் சேவலின் வால் பகுதியை வெள்ளைத் தாளில் இரண்டாக மடித்து வரைந்து வெட்டி எடுக்க வேண்டும். புள்ளி கோடிட்ட பகுதியை மடித்தும் ஒட்டும் பகுதியாக வைத்துக்கொள்ளவும்.
படம் 6 மற்றும் 7-ல் உள்ளது போல் சேவலின் கொண்டை, தாடியைச் சிவப்பு தாளில் வரைந்து கொள்ளவும்.
படம் 8-ல் இருப்பதுபோல், ஆரஞ்சு வண்ணத் தாளைப் பட்டையாக வெட்டி, பொட்டலம்போல் கூராகச் சுருட்டவும். அதன் முனையை ஒட்டி, அதைச் சிறியதாக வெட்டி சேவல் மூக்கு தயாரிக்கவும். இப்போது முட்டைச் சேவலை உருவாக்க எல்லாமே தயார்.