பூந்தோட்டம் - குழந்தைப் பாடல்

பூந்தோட்டம் - குழந்தைப் பாடல்
Updated on
1 min read

வண்ண வண்ண பூக்களால்

எண்ண மெல்லாம் துள்ளுதே !

சின்னச் சின்னக் குழந்தைகள்

சிரித்து மகிழ்ந்து பார்க்குதே !

மொட்டு விடும் ஒரு செடி

தொட்டு உண்ணும் தேனீக்கள்

விட்டுப் போக மனமில்லை

வீடாய் மாறட்டும் பூந்தோட்டம்.

காலை மாலை வேளையில்

தண்ணீர் ஊற்றும் போதிலே

செடி குளிப்பது அற்புதம்

மனங் குளிர்வது நிச்சயம்.

ஊட்டி மலர்க் கண்காட்சி

கூட்டிப் போகும் போதிலே

உள்ள மெல்லாம் பறக்குதே

நம்முள் புத்துணர்வு பிறக்குதே !

செடி வளர்த்திட விரும்பினோம்

மரம் வளர்த்திட விரும்பினோம்

சுற்றுச் சூழல் சிறந்திட

புது எண்ணத்தோட திரும்பினோம்.

- மு.மகேந்திர பாபு,
கருப்பாயூரணி,
மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in