Last Updated : 12 Jun, 2019 11:23 AM

 

Published : 12 Jun 2019 11:23 AM
Last Updated : 12 Jun 2019 11:23 AM

அறிவியல் மேஜிக்: ஊதினாலும் அணையாத மெழுகுவர்த்தி!

புயல் காற்றுவீசும்போது, எப்படி நின்றால் உங்களுக்குப் பாதுகாப்பானது என்பதை ஒரு பரிசோதனை மூலம்  தெரிந்து கொள்வோமா?

என்னென்ன தேவை?

மெழுகுவர்த்தி, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், தண்ணீர், தீப்பெட்டி, காகித அட்டை

எப்படிச் செய்வது?

# மெழுகுவர்த்தியை எடுத்து திரியைப் பற்ற வையுங்கள்.

# எரியும் மெழுகுவர்த்தியை மேகமாக ஊதுங்கள். மெழுகுவர்த்தி அணைந்துவிட்டதா?

# பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள். அந்த பாட்டிலை மெழுகுவர்த்திக்குப் பின்னால் வையுங்கள்.

# மெழுகுவர்த்தியை மீண்டும் பற்றவையுங்கள். இப்போது தண்ணீர் பாட்டிலுக்குப் பின்னால் நின்றுகொண்டு வேகமாக ஊதிக்கொண்டே இருங்கள்.

# என்ன ஆனது? மெழுகுவர்த்தி அணைய சற்று நேரமானாலும், அது அணைந்துவிட்டதா?

# சரி, தண்ணீர் பாட்டிலை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் காகித அட்டையைக் கையில் பிடித்துக்கொள்ளுங்கள். மெழுகுவர்த்தியை ஏற்றி மீண்டும் வேகமாக ஊதுங்கள்.

l இப்போது நடப்பதைப் பாருங்கள். மெழுகுவர்த்தி அணையவில்லையா?

மெழுகுவர்த்திக்கு முன்னால் பாட்டிலை வைத்து ஊதியபோது அணைந்த மெழுகுவர்த்தி, காகித அட்டையை வைத்து ஊதியபோது ஏன் அணையவில்லை?

காரணம்

முதலில் மெழுகுவர்த்தியை நேரடியாக ஊதியபோது, காற்று முழுவதும் மெழுகுவர்த்திக்குச் செல்வதால், அது உடனே அணைந்துவிட்டது. மாறாக, பாட்டிலை வைத்து ஊதும்போது, காற்று நேராகச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறது. காற்று பாட்டிலின் பக்கவாட்டைச் சுற்றி செல்கிறது. இதனால், காற்றின் அழுத்தம் குறைந்து, மெழுகுவர்த்தி அணைய சற்று நேரம் பிடிக்கிறது.

அது மட்டுமல்ல, ஓரிடத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கிறது என்றால், அந்த இடத்தில் மற்ற பொருட்களின் அழுத்தம் குறையும் என்று பெர்னோலி தத்துவத்தில் படித்திருப்பீர்கள். இதன்படி, பாட்டிலைச் சுற்றிச் செல்லும் காற்று, எரியும் மெழுகுவர்த்தியை அணைத்துவிடுகிறது.

பாட்டிலுக்குப் பதிலாக காகித அட்டையை வைத்து காற்றை ஊதும்போது, பக்க வாட்டிலும் மேலும் கீழும் காற்றுப் பிரிந்து செல்கிறது. இதனால், மெழுகுவர்த்தியின் மேல் காற்றுப் படுவதில்லை. மெழுகுவர்த்தியும் அணையவில்லை.

பயன்பாடு

புயல் காற்று வீசும்போது நீங்கள் திறந்தவெளியில் நின்றாலோ, மரத்தின்பின் நின்றாலோ, காற்று உங்களை நேரடியாகத் தாக்கிக் கீழே சாய்த்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x