

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடு.
2. இதன் அருகில்தான் சாக்கடல் (Dead sea) அமைந்துள்ளது.
3. இந்த நாட்டின் தலைநகர் அம்மான்.
4. அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளின் அகதிகள் இங்கு குடியேறியுள்ளனர். இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான்.
5. பெட்ரா மிகப் பழமையான நகரம். 'ரோஸ் நகரம்' என்றும் அழைக்கப்படும் இந்த நகரில் அற்புதமான கட்டிடக் கலைக்குச் சான்றாகப் பல கட்டிடங்கள் இருக்கின்றன.
6. பெட்ரோல் கிணறுகள் இங்கு இல்லை.
7. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகள் எகிப்தும் இதுவும்தான்.
8. கறுப்பு, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளின் இடது பக்கத்தில் சிவப்பு முக்கோணத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுகிறது இதன் தேசியக் கொடி.
9. 1946-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு.
10. அரேபிய மறிமான் (Arabian oryx) தேசிய விலங்கு.
விடை: ஜோர்டான்