விடுகதை

விடுகதை
Updated on
1 min read

1. வெள்ளை மாளிகை அது. ஆனால், உள்ளே செல்ல வாசல் இல்லை. அது என்ன?

2. காலை மாலையில் நெட்டை; மதியம் குட்டை. நான் யார்?

3. பற்கள் உண்டு. ஆனால் கடிக்காது. அது என்ன?

4. சிவப்பு பட்டுப்பையில் பவுன் காசுகள். அது என்ன?

5. முதுகிலே சுமை. தூக்கிக் கொண்டு முனகாமல் அசைந்து வரும். அது என்ன?

6. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும். அது என்ன?

7. சட்டையைக் கழற்றினால் சத்தான உணவு. அது என்ன?

8. காற்று நுழைந்ததும் காதுக்கு இனிமையான பாட்டு. அது யார்?

9. தொட்டுப் பார்க்கலாம். ஆனால் எட்டிப் பார்க்கமுடியாது. அது என்ன ?

10. இந்தக் கடைக்கு எப்போதும் விடுமுறை இல்லை. அது என்ன கடை?

விடை :

1. முட்டை 2. நிழல் 3. சீப்பு 4. காய்ந்த மிளகாய் 5. நத்தை 6. சங்கு 7. வாழைப்பழம் 8. புல்லாங்குழல் 9. முதுகு 10. சாக்கடை

- வி. மோனிகா, 10-ம் வகுப்பு,
ஏ.ஜி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,
வேளச்சேரி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in