

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. வாடிகனை அடுத்து இதுதான் உலகின் மிகச் சிறிய நாடு.
2. தலைநகரின் பெயரும் நாட்டின் பெயரும் ஒன்றே.
3. இதன் கொடியை வரைவது மிக சுலபம். மேல்பாதி சிவப்பு, கீழ்பாதி வெள்ளை.
4. 2016-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,400 பேர் வாழ்கிறார்கள்.
5. ஆட்சி மொழி பிரெஞ்சு.
6. இன்றுவரை இங்கு மன்னர் ஆட்சிதான்.
7. வருமானவரி கிடையாது.
8. சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு.
9. இங்கு நடைபெறும் பார்முலா 1 கார் பந்தயங்கள் புகழ்பெற்றவை. மிகவும் சவாலான பந்தயப் பாதையாக இருக்கிறது.
10. இங்கு விமான நிலையங்களே கிடையாது. ஹெலிகாப்டர் அல்லது ரயிலில்தான் இங்கு வந்து சேரமுடியும்.
விடை: மொனாகோ