

என்னென்ன தேவை?
டார்ச் லைட், தடிமனான சதுர அட்டை, செவ்வக அட்டை, பன்சிங் மிஷின், செல்லோ டேப், கண்ணாடி போன்று மெல்லிய பல வண்ணத்தாள்கள், பசை.
1. செவ்வக அட்டையை எடுத்து, துளை போடும் கருவியால் ஆங்காங்கே துளைகளைப் போடுங்கள்.
2. வண்ணக் காகிதங்களைச் சிறிதாக வெட்டி, துளைகளின் மேல் ஒட்டுங்கள்.
3. இந்த அட்டையின் இரு பக்கங்களையும் பசை கொண்டு ஒட்டுங்கள்.
4. செவ்வக அட்டை மீது சிறிய சதுரை அட்டையைப் பசை மூலம் மேல் பகுதியில் ஒட்டுங்கள்.
5. செவ்வக அட்டைக்குள் டார்ச் லைட்டைச் சொருகுங்கள். விளக்கை எரியவிடுங்கள். வெளிச்சம் பல வண்ணங்களில் அறையை நிறைக்கும். இருட்டான அறையில் மிக அழகாகத் தெரியும்.