

நேயா
ராமேஸ்வரத்தில் வாழும் ஐந்து நண்பர்கள் கடற்கரையோரம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு விநோத விண்கல்லைப் பார்க்கிறார்கள். அந்தப் பேசும் விண்கல்லை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். காணாமல் போய்விடும் புதையல் போன்ற அந்தக் கல்லைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
அந்தக் கல் பல அறிவியல் தகவல்களைச் சொல்கிறது. திடீரென்று ஏற்படும் ஒரு பிரச்சினைக்குப் பிறகு அந்தக் கல் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தக் கதை வழியாக பல அறிவியல் தகவல்களை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
தலைகீழ் புஸ்வானம்,
யெஸ். பாலபாரதி
வானம் வெளியீடு,
தொடர்புக்கு: 91765 49991
தியா
எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் போது மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால், ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும் படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள்.
இது ஏன் என்று ஆராய்வதுடன், தனியார் பள்ளி – அரசுப் பள்ளி சார்ந்த பிரச்சினைகள், தாய்மொழிக் கல்வி போன்றவற்றைப் பற்றியும் இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
பி.வி. சுகுமாரன்,
தமிழில்: யூமா வாசுகி
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,
தொடர்புக்கு: 044 - 24332924
நான்கு கனவுகள்,
சமீபகாலமாகக் குழந்தைகளுக்கும் எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். விலங்குக் கதைகள், கற்பனைக் கதைகள் நிறைந்த இந்தப் புத்தகத்தில் சிறார்களே கதாபாத்திரங்களாக வரும் கதைகளும் உண்டு. ஓவியர் டி.என். ராஜனின் ஓவியங்கள் இந்தப் புத்தகத்துக்குத் தனி அழகு சேர்த்துள்ளன.
பாவண்ணன்
நெஸ்லிங் புக்ஸ்,
தொடர்புக்கு: 044-26251968
தமிழ் குழந்தை இலக்கியத்தில் ஒரு காலத்தில் நிறைய பாடல்கள் எழுதப்பட்டன, பாடப்பட்டன. ஆனால், இன்றைக்குப் பாடல்கள் எழுதுவது குறைந்து போய்விட்ட நிலையில் எழுத்தாளர் சுகுமாரன் 70 பாடல்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
சுகுமாரன்
கிறிஷ் கயல் வெளியீடு,
தொடர்புக்கு: 91765 94635
பறவைகளின் வீடுகள்,
ரஷ்ய சிறார் புத்தகங்களைப் போலவே, சீனாவிலிருந்து இந்தியா வந்த வண்ணச் சிறார் புத்தகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. அதிலும் இயற்கை குறித்த சீனப் புத்தகங்கள் உயிரினங்கள், காடுகள் குறித்த அறிவியல் அறிவை மேம்படுத்தக்கூடியவை. இந்தப் புத்தகம் பறவைகளின் பல்வேறு வகையான வீடுகள் குறித்து சுவாரசியமாக விளக்குகிறது.
ஜூ ஸி,
தமிழில்: சாலை செல்வம்
குட்டி ஆகாயம் பதிப்பகம்,
தொடர்புக்கு: 98434 72092