

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு. உகாண்டா, தான்சானியா, புருண்டி, காங்கோ இதன் அருகில் இருக்கும் நாடுகள்.
2. தலைநகர் கிகாலி.
3. 1962-ம் ஆண்டு ஜூலை 1 அன்று விடுதலை அடைந்தது.
4. நாடு முழுவதும் மலைப்பாங்கான இடங்களில் அமைந்திருக்கிறது. இதனால் ‘ஆயிரம் குன்றுகளின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது.
5. கரிசிம்பி செயல்படாத எரிமலை. விருங்கா மலையில் மிக உயரமான இடம் இதுதான்.
6. மலை கொரில்லா, பொன் குரங்கு இந்த நாட்டின் அரிய விலங்குகள். இவற்றைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
7. உலக அளவில் ஆண் - பெண் சமத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு. இதன் நாடாளுமன்றத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
8. முக்கிய ஆறுகள் காங்கோ, நைல். நீளமான ஆறு நயபரொங்கோ.
9. தங்கம், தகரம், மீத்தேன் போன்ற இயற்கை வளங்கள் இங்கே அதிகம்
10. தேசிய விலங்கு சிறுத்தை.
விடை: ருவாண்டா