இது எந்த நாடு? - 94: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு

இது எந்த நாடு? - 94: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு
Updated on
1 min read

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மத்தியக் கிழக்கில் அமைந்துள்ள நாடு. லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈராக், துருக்கி இதன் பக்கத்து நாடுகள்.

2. 1936-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து விடுதலைப் பெற்றதாக அறிவித்தது. 1946-ம் ஆண்டு முழுமையாக விடுதலை அடைந்ததாக அங்கீகரிக்கப்பட்டது.

3. இங்குள்ள டமாஸ்கஸ் நகரம் மிகவும் பழமையானது. இதுவே இந்த நாட்டின் தலைநகர்.

4. இந்த நாட்டின் கொடியில் 2 நட்சத்திரங்கள் இருக்கின்றன.

5. அஸ்ஸாட் மிகப் பெரிய ஏரி. மனிதரால் உருவாக்கப்பட்டது.

6. இந்த நாட்டின் தேசியப் பறவை ஒரு வகைப் பருந்து (Hawk).

7. டமாஸ்கஸில் அமைந்துள்ள ’உமையாத் மசூதி’ மிகப் பழமையானது. இஸ்லாமியர்களின் நான்காவது புனிதத்தலமாகக் கருதப்படுகிறது.

8. பெட்ரோலியம், பாஸ்பேட், மார்பிள், ஜிப்சம் போன்ற இயற்கை வளங்கள் உள்ளன.

9. கால்பந்து, கூடைப்பந்து, நீச்சல், டென்னிஸ் மிகவும் பிரபலமான விளையாட்டுகள்.

10. 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு.

விடை: சிரியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in