இது எந்த நாடு? - 97 போரில் பங்கேற்காத நாடு!

இது எந்த நாடு? - 97 போரில் பங்கேற்காத நாடு!
Updated on
1 min read

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடு.

2. ஸ்பெயின் நாட்டின் பிஷப்பும் பிரான்ஸ் நாட்டின் அதிபரும் இந்த நாட்டை ஆள்கிறார்கள்.

3. குறைவாக வரி விதிக்கப்படுவதால், பிற நாடுகள் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

4. சுற்றுலாவுக்கு வரிகள் விதிக்கப்படாததால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது.

5. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்த நாட்டின் கரன்சி யூரோ.

6. இந்த நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 வயது.

7. இதுவரை போரில் பங்கேற்காத நாடு.

8. நீலம், மஞ்சள், சிவப்புப் பட்டைகள் இந்த நாட்டுக் கொடியில் இருக்கின்றன.

9. கேட்டலான் அதிகாரப்பூர்வ மொழி.

10. விமான சேவை இல்லாவிட்டாலும் ஹெலிகாப்டர் போக்குவரத்து இருக்கிறது.

விடை: அண்டோரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in