

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. வட ஆப்பிரிக்காவில் இருக்கிறது.
2. இந்த நாட்டின் பெயருக்கு அராபி மொழியில் 'சூரியன் மறையும் இடம்' என்று பொருள்.
3. 1956-ல் சுதந்திரம் பெற்ற நாடு.
4. ஆப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரே ஆப்பிரிக்க நாடு.
5. இதன் தலைநகர் ரபாட்.
6. இந்த நாட்டு தேசியக் கொடியில் சிவப்பு வண்ணத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும்.
7. தேசிய விளையாட்டு கால்பந்து.
8. ஆலிவ், ஓக், தேவதாரு மரங்கள் அதிகம் இருக்கின்றன.
9. பார்லி, கோதுமை, ஆரஞ்சு போன்றவை விளைவிக்கப்படுகின்றன.
10. தேசிய விலங்கு சிங்கம் (Barbary Lion).
விடை: மொராக்கோ