

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. கரீபியன் கடலுக்கு கிழக்குத் திசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு.
2. பிரிட்டனிடமிருந்து 1966-ம் ஆண்டு விடுதலை பெற்றது.
3. ப்ரிட்ஜ்டவுன் இந்த நாட்டின் தலைநகர்.
4. சர்க்கரை உற்பத்தி இங்கே அதிகம்.
5. வெள்ளை மணல் கொண்ட கடற்கரைகளும், மிகத் தெளிவான நீர்நிலைகளும் நிறைந்த நாடு என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்.
6. இந்த நாட்டு மக்களை ‘பஜன்’ என்று அழைக்கிறார்கள்.
7. மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் இந்த நாட்டில் பிறந்தவர்.
8. தேசியப் பறவை பழுப்பு கூழைக்கடா (Brown Pelican). தேசிய மலர் மயில் கொன்றை.
9. இங்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
10. கரும்பு பயிரிடுவதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை இங்கே அதிகம் அழைத்து வந்ததால், ஆப்பிரிக்க வம்சாவளியினர் அதிகம் இருக்கிறார்கள்.
விடை: பார்படோஸ்