

1. ஒத்தைக்கால் ஒல்லிக்குச்சிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
2. கொடி உடம்புக்காரி. கூடையளவு பிள்ளை. அது என்ன?
3. தாடி மீசைக்காரன். கோயிலுக்குள் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்?
4. குட்டை அழகிக்கு நெட்டையான ஜடை. அது என்ன?
5. பாம்பு போவே இருக்கும், ஆனால் பாம்பில்லை. அது என்ன?
6. கீரையோடு சேர்ந்து பிறந்தாலும், இது ருசிக்கும் காய். அது என்ன?
7. வெட்டினால் பசை போல ஒட்டும். சமையலில் ருசிக்கும். அது என்ன?
விடை : 1. மிளகாய் 2. பூசணிக்காய் 3. தேங்காய் 4. கத்தரிக்காய் 5. புடலங்காய் 6. முருங்கைக்காய் 7. வெண்டைக்காய்