ஐந்து தலைப் பாம்பு - நீங்களே செய்யலாம்

ஐந்து தலைப் பாம்பு - நீங்களே செய்யலாம்
Updated on
2 min read

பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதாவது வீட்டருகேயோ, பாம்பு பண்ணையிலோ, விலங்கு காட்சிச் சாலையிலோ பார்த்திருப்பீர்கள். ஆனால், ஐந்து தலைப் பாம்பு? டிவியிலோ சினிமாவிலோ டூப்ளிகேட் ஐந்து தலைப் பாம்பைப் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் முயற்சி செய் தால், வீட்டிலேயே நீங்களும் டூப்ளிகேட் ஐந்து தலைப் பாம்பைச் செய்யலாம்.

செய்முறை

1. கறுப்பு களி மண்ணின் மூலம் படத்தில் காட்டியுள்ளவாறு பாம்பின் ஐந்து தலைகளை உருவாக்க வேண்டும்.

2. ஒயரை எடுத்து அதன் மீதுள்ள பிளாஸ்டிக் உறையை நீக்கிவிடவும். உள்ளேயிருக்கும் கம்பியை வெளியே எடுக்கவும். இப்போது படமெடுத்த நிலையில் நிற்கும் பாம்பின் உடம்பு போல இந்த ஒயரை வளைத்து அதன் மீது களிமண்ணைப் பூசவும்.

3. ஏற்கனவே உருவாக்கிய தலைகளை ஒயரின் ஐந்து முனைகளிலும் படத்தில் உள்ளதுபோல இணைக்க வேண்டும். ஒயரின் இன்னொரு முனை வெளியே நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் பாம்பின் நாக்கு.

4. இந்த வேலையைச் செய்து முடித்தவுடன், பாம்பின் முகத்தை வெள்ளை ஸ்கெட்ச் பேனா உதவியுடன் தலையில் வரைய வேண்டும்.

5. இப்போது டூப்ளிகேட் ஐந்து தலைப் பாம்பு உங்கள் முன்னால் தலையை ஆட்டி நிற்கும்

தேவையான பொருள்கள்

எலக்ட்ரிக் ஒயர் சிறிய துண்டு, வெள்ளை ஸ்கெட்ச் பேனா, கறுப்பு வண்ணக் களிமண்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in