இது எந்த நாடு?- 83: லெமூர்களின் நாடு

இது எந்த நாடு?- 83: லெமூர்களின் நாடு
Updated on
1 min read

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு.

2. உலகிலேயே நான்காவது பெரிய தீவு.

3. பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1960-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.

4. இதன் தலைநகரம் அன்டனானரிவா.

5. இங்கு காணப்படும் 2,50,000 வன உயிரினங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான உயிரினங்கள் வேறு எங்கும் இல்லை. 14 ஆயிரம் தாவர இனங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் வேறு எங்கும் இல்லை.

6. லெமூர் விலங்குகளில் 103 வகைகள், துணை வகைகள் இங்கு மட்டுமே வாழ்கின்றன.

7. வெனிலா, கிராம்பு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு.

8. தேசிய விளையாட்டு ரக்பி.

9. மலகஷ், பிரெஞ்சு அதிகாரப்பூர்வமான மொழிகள்.

10. தண்ணீரைச் சேமித்து வைக்கும் பாவோபாப் மரங்கள் இங்கே இருக்கின்றன.

விடை: மடகாஸ்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in