

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அமைந்திருக்கும் நாடு.
2. கிறிஸ்தவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு.
3. இந்த நாட்டின் தலைநகர் எரெவான். மிகத் தொன்மையான நகரம்.
4. 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலைப் பெற்றது.
5. விவசாயத்தில் அதிகம் ஈடுபடும் நாடு. திராட்சை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டேவிட் தி இன்வின்சிபிள்’ என்ற தத்துவ அறிஞரின் தத்துவங்கள் புகழ்பெற்றவை.
7. 1988-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால், இங்கே 25 ஆயிரம் மக்கள் மடிந்தனர்.
8. குத்துச் சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை.
9. செஸ் விளையாட்டுப் பள்ளியிலேயே சொல்லித் தரப்படுகிறது. லெவோன் அரோனியன் என்ற செஸ் விளையாட்டு வீரர், உலக அளவில் அதிகத் தரப்புள்ளிகள் பெற்ற நான்காவது வீரராக இருக்கிறார்.
10. டென்னிஸ் வீரர் ஆந்த்ரே அகஸ்ஸி இந்த நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
விடை: ஆர்மீனியா