

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தென் பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு. 1970-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
2. இங்கு வசிப்பவர்களில் சுமார் 40 சதவீதம் மக்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
3. இந்த நாட்டின் தலைநகரம் சுவா.
4. சுற்றுலாவும் சர்க்கரையும் முக்கியமான தொழில்கள். வெள்ளை மணல் கடற்கரைகள், அழகிய தீவுகள், பவளத்திட்டுகள் என்று வசீகரிக்கக் கூடிய நாடு. லவேனா கடற்கரை அற்புதமாக இருக்கும்.
5. ரக்பி மிகப் பிரபலமான விளையாட்டு.
6. இந்த நாட்டில் உள்ள 323 தீவுகளில் 100 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள்.
7. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த அபேல் டாஸ்மான் என்பவர்தான் இந்த நாட்டைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர்.
8. இந்த நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர பால் செளத்ரி இருந்திருக்கிறார்.
9. உலகப் புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் விஜய்சிங் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
10. ‘Fun In Jungle Island’ என்பதில் இந்த நாட்டின் பெயர் ஒளிந்திருக்கிறது.
விடை: ஃபிஜி