இது எந்த நாடு 68: வண்ண நதி பாயும் நாடு!

இது எந்த நாடு 68: வண்ண நதி பாயும் நாடு!
Updated on
1 min read

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. தென் அமெரிக்காவின் நுழைவாயில் என்று இந்த நாடு அழைக்கப்படுகிறது.

2. பனாமா, வெனிசூலா, பிரேசில், ஈக்வடார், பெரு போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது.

3. அமேசான் மழைக் காடுகளின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.

4. பசிபிக், கரீபியன் ஆகிய கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.

5. உயிரினப் பன்மையில் உலகின் இரண்டாவது நாடு. அரிய வண்ணத்துப்பூச்சிகள், ஆர்கிட் செடிகள், அழகிய விஷத் தவளைகள் இங்கே காணப்படுகின்றன.

6. மரகதக் கற்களுக்கும் காபிக்கும் புகழ்பெற்ற நாடு.

7. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு டெஜோ. மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.

8. உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர். 'தனிமையின் நூறு ஆண்டுகள்' என்ற இவரது நூல் மிகப் பிரபலம்.

9. கேனோ கிறிஸ்டல் என்பது இந்த நாட்டின் மிக அழகான நதி. ஐந்து வண்ணக் கற்களால் நீரில் தோன்றும் வானவில் போன்று காட்சியளிக்கிறது.

10. கிறிஸ்டோபர் கொலம்பஸ் பெயரில் இந்த நாடு அழைக்கப்படுகிறது. தலைநகர் பொகோட்டா.

விடை: கொலம்பியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in