ரப்பர் பொருள்கள் எதில் தயாரிக்கப்படுகின்றன?  டிங்குவிடம் கேளுங்கள்

ரப்பர் பொருள்கள் எதில் தயாரிக்கப்படுகின்றன?  டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

உலகில் உள்ள ரப்பர் பொருள்கள் எல்லாம் ரப்பர் மரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றனவா, டிங்கு? - ர. தக் ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

இல்லை, தக் ஷணா. தாவரங்கள் போன்ற இயற்கை மூலகங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை இயற்கை ரப்பர். டயர்கள், ரப்பர் பேண்ட், கையுறை, மருத்துவம் சார்ந்த பொருள்கள், காலணிகள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட்கள், குழாய்கள் போன்றவை இயற்கை ரப்பரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

செயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை செயற்கை ரப்பர். இவை பெரும்பாலும் வாகனங்கள் உற்பத்தியிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை ரப்பர் மட்கும் தன்மை கொண்டது. மீண்டும் அதைப் புதுப்பித்து, பயன்படுத்த முடியும். ஆனால் செயற்கை ரப்பர் மட்காது. அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் முடியாது.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும் உணவைத் தங்களுக்குகெனப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன், டிங்கு? - கு. விக்னேஷ்வரன், 5-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

தாவரங்களை மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் பயன்படுத்திக்கொள்வதால், இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்களா, விக்னேஷ்வரன்? தாவரங்கள் தங்களுக் காகத்தான் ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய ஒளி, நீர், கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி குளுக்கோஸ் எனும் சர்க்கரையை உருவாக்குகின்றன. பின்னர் அவற்றை ஆற்ற லுக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன. மனிதர்களாகிய நாமும் விலங்குகளும் பறவைகளும் நம் உணவு தேவைக்காகத் தாவரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in