புவிசார் குறியீடு என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

புவிசார் குறியீடு என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

புவிசார் குறியீடு என்றால் என்ன, டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

கிருஷ்ணகிரி மாம்பழம், மதுரை மல்லிகை, மானாமதுரை மட்பாண்டம், தஞ்சாவூர் பொம்மை, திண்டுக்கல் பூட்டு, ஊட்டி வறுக்கி, கொடைக்கானல் மலைப்பூண்டு போன்றவை எல்லாம் மிகவும் புகழ்பெற்றவை அல்லவா! இப்படி அந்தந்த ஊர்களில் பிரசித்திப் பெற்று, தனிச்சிறப்போடு இருக்கும் பொருள் அல்லது பொருள்களைப் பாதுகாப்பது, பண்பாட்டு மரபைப் பேணிக் காப்பதுடன் உள்ளூர் பொருளாதாரத்துக்கும் ஊக்கமளிக்கிறது இந்தப் புவிசார் குறியீடு.

இதன் மூலம் அந்தப் பொருளுக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய பண்புகளையும் தனித்துவமான சிறப்பியல்புகளையும் பிரதிபலிக்கக்கூடிய கைவினைப் பொருள்கள், கைத்தறித் தயாரிப்புகள், உற்பத்திப் பொருள்கள், ஜவுளித் தயாரிப்புகள், வேளாண் பொருள்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே புவிசார் குறியீடு, இனியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in