கோலா குடித்த பின் மென்டோஸ் சாப்பிடலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்

கோலா குடித்த பின் மென்டோஸ் சாப்பிடலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

கோக கோலா குடித்த பின் ஏன் மென்டோஸ் மிட்டாய் சாப்பிடக் கூடாது, டிங்கு? – ம. சங்கேஷ்ராஜ், 8-ம் வகுப்பு, வி.எம்.ஜெ. மேல்நிலைப் பள்ளி, மதுரை.

கோலா-மென்டோஸ் வீடியோக்களைப் பார்த்ததால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கோலாவில் மென்டோஸைச் சேர்க்கும்போது பாட்டிலில் இருந்து நுரை வெளியேறும் என்பது உண்மைதான்.

கோலாவில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு கலந்த நீர், மென்டோஸில் உள்ள கடினமான மேற்பரப்பைக் கரைக்கும்போது நுரை உண்டாகிறது. கடினமான மேற்பகுதி கரைந்த உடன் நுரை அடங்கிவிடும்.

நீங்கள் கோலா குடித்துவிட்டு, மென்டோஸைச் சாப்பிடும்போது, வாயில் கரைந்து செல்லும் மென்டோஸால் வயிற்றில் இருக்கும் கோலாவில் நுரை உண்டாகாது. அதாவது பாட்டிலில் மென்டோஸ் போட்டபோது வெளிவந்த நுரைபோல் வயிற்றில் நுரை வராது. அதனால் பயப்பட வேண்டியதில்லை.

உடலில் ஏதாவது பிரச்சினை இருப்பவர்கள் கோலாவையும் மென்டோஸையும் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். பொது வாகவே அதிக இனிப்புள்ள மிட்டாயையும் கார்பன் டை ஆக்ஸைடு கலந்த பானத்தையும் தவிர்ப்பது நல்லது, சங்கேஷ்ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in