

சின்ன சின்ன நாய்க் குட்டி
செல்லமான நாய்க் குட்டி
நன்றி உள்ள நாய்க் குட்டி
நன்மை செய்யும் நாய்க் குட்டி!
சொன்ன சொல்லைக் கேட்டிடும்
வாஞ்சையாய் வாலை ஆட்டிடும்
முன்பின் தெரியா மனிதரை
முறைத்துப் பார்த்து குரைத்திடும்!
துள்ளிக் குதித்து ஆடிடும்
துடிப்பாய் எங்கும் ஓடிடும்
கள்ளம் இல்லா நாய்க் குட்டி
கருத்து மிக்க நாய்க் குட்டி!
பாலை வைத்தால் குடித்திடும்
பாசம் மிக்க நாய்க் குட்டி
காலை மாலை இரவெல்லாம்
காவல் காக்கும் நாய்க் குட்டி!
காவல் துறைக்குத் திருடரைக்
காட்டிக் கொடுக்கும் நாய்க் குட்டி
ஆவலோடு வளர்க்கவும்
அன்பாய் நாமும் பழகலாம்!
- நா. ராதாகிருஷ்ணன், கடலூர்