இது எந்த நாடு? 65: ஜோகோவிச் பிறந்த நாடு

இது எந்த நாடு? 65: ஜோகோவிச் பிறந்த நாடு
Updated on
1 min read

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மத்திய தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு.

2. இந்த நாட்டின் தலைநகரம் பெல்கிரேடு.

3. சில்வர் ஏரி மிகவும் பெரியது. தூய்மையான இந்த ஏரியைக் கடல் என்றும் அழைக்கிறார்கள்.

4. 3, 4-ம் நூற்றாண்டில் இன்று இந்த நாட்டில் உள்ள பகுதியில்தான் 18 ரோமானிய சக்ரவர்த்திகள் பிறந்துள்ளனர்.

5. கடிகாரத் தயாரிப்பில் சுவிட்சர்லாந்து நாட்டைவிட மிகவும் தொன்மையான நாடு.

6. 2006-ம் ஆண்டு மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த நாட்டிடமிருந்து மொண்டெனேகுரோ பிரிந்து சென்றது.

7. ராஸ்பெர்ரி பழத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு.

8. Vampire (ரத்தக்காட்டேரி) என்ற வார்த்தை இந்த நாட்டு மொழியில் இருந்துதான் உருவானது.

9. இரண்டு வெள்ளைக் கழுகுகள் இந்த நாட்டின் சின்னம்.

10. உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவாக் ஜோகோவிச் இந்த நாட்டுக்காரர்.

விடை: செர்பியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in