

உணவே மருந்து என்று சொல்வதை இந்தக் காலத்திலும் ஏற்க முடியுமா, டிங்கு? - மெர்வின் சுதேஷ், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
எந்தக் காலத்திலும் நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டால் நோய்கள் எளிதில் தாக்காது என்பதால் உணவே மருந்து என்பது சரிதான். முன்பெல்லாம் பழங்கள், வெறும் வாணலியில் வறுத்த வேர்க்கடலை, பட்டாணி, உப்புக்கடலை, சத்துமாவு உருண்டைகள் போன்றவை நொறுக்குத்தீனிகளாக இருந்தன.
ஆனால், இப்போதோ எண்ணெய்யில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு அதிகமிருக்கும் கேக் வகைகள் போன்றவை நொறுக்குத்தீனிகளாக இருக்கின்றன. இவற்றைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டால் நல்லது, மெர்வின் சுதேஷ்.