

மழை வருவதற்கு முன்பும், மழை பெய்யும் போதும் வீட்டு ஜன்னல் வழியாக வெளிச்சத்தைப் பாய்ச்சும் மின்னல் எப்படித் தோன்றுகிறது என்று யோசித்தது உண்டா? வானத்தில் இருந்து கண்ணைப் பறிக்கும் அளவுக்கு ஒளிக்கீற்றுகளாக வரும் மின்னலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்தவர் பெஞ்சமின் ஃபராங்களின்தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கு மின்னளின் பின்னணி பற்றி அறியப் பேராவல் கொண்டிருந்தார். தீவிர ஆய்வில் ஈடுபட்ட பெஞ்சமின், 1882-ம் ஆண்டில் மின்னல் பற்றித் தான் அறிந்த விளக்கத்தை உலகிற்குத் தெரிவித்தார்.
வானில் மேகங்கள் சூழ்ந்திருக்கும்போது, மேகங்களில் உள்ள சிறுசிறு நீர்த்திவலைகள் காற்றுடன் உராய்ந்து மின்னூட்டம் பெறுகின்றன. சில மேகங்கள் நேர் மின்னூட்டம் பெறுகின்றன. இன்னும் சில மேகங்கள் எதிர் மின்னூட்டம் பெறுகின்றன. நேர் மின்னூட்டம் பெற்ற மேகம், எதிர் மின்னூட்டம் பெற்ற மேகத்துடன் மோதும் போது, லட்சக்கணக்கான வோல்ட் மின் அழுத்த வேறுபாடு உண்டாகிறது.
இவ்வளவு அதிக மின்னழுத்தம் உண்டாவதால், மேகங்களிடையே காற்றினூடே மின்சாரம் வேகமாகப் பாய்கிறது. அதுவே ஒளிக்கீற்றலாக வானில் தென்படுகிறது. அதுதான் மின்னல். இடி, மின்னலில் தற்காத்துக் கொள்ள இடி தாங்கியைக் கண்டுபிடித்ததும் பெஞ்சமின் ஃப்ராங்களின்தான்.