இது எந்த நாடு? 67: இளஞ்சிவப்புக் கடற்கரை நாடு

இது எந்த நாடு? 67: இளஞ்சிவப்புக் கடற்கரை நாடு
Updated on
1 min read

கீழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. அட்லாண்டிக் பெருங்கடலில் 700 தீவுகளைக் கொண்ட கொண்ட நாடு.

2. இதன் தலைநகரம் நாசோ.

3.1492-ல் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தபோது கிறிஸ்டோபர் கொலம்பஸ் பார்வையில் முதலில் பட்டது இந்த நாடுதான்.

4. ஆங்கிலேயர்களிடமிருந்து 1973-ல் விடுதலை பெற்றது.

5. வண்ண உடைகள் அணிந்து, பாரம்பரிய இசை, நடனங்களுடன் கொண்டாடப்படும் விழா ஜான்கனூ.

6. ஸ்பானிஷ் மொழியில் ’ஆழம் குறைந்த கடல்’ என்று இந்த நாட்டின் பெயர்.

7. உலகிலேயே மிக நீளமான நீருக்கடியில் இருக்கும் குகை லுகாயன் தேசியப் பூங்காவில் இருக்கிறது.

8. உலகிலேயே பூநாரைகள் (ஃபிளமிங்கோ) இங்கேதான் அதிகம் இருக்கின்றன. இதுவே இந்த நாட்டின் தேசியப் பறவை.

9. இங்குள்ள காட்டு உயிரினங்கள், அழகிய கடற்கரைகளைப் பார்ப்பதற்காக ஆண்டுக்கு 50 லட்சம் மக்கள் வருகிறார்கள்.

10. இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரை ஹார்பர் தீவில் இருக்கிறது.

விடை: பஹாமாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in