

நாம் வாழும் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பொருளாதார நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் எஸ்தர் டஃப்ளோ ஐந்து புத்தகங்களைச் சிறார்களுக்காக எழுதி இருக்கிறார்.
நகரத்துக்கு வரும் கிராமத்தினரின் பிரச்சினைகள், தேர்தலில் மக்களின் உரிமைகள், பள்ளியில் கற்றல் பிரச்சினைகளுக்குத் தீர்வு, கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது, எளிய மக்களுக்கான சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை மையமாக வைத்து, ‘அடிப்படை உரிமைகள்’ என்கிற தலைப்பில் ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
இந்த நூல்களை எழுத்தாளர்கள் சாலை செல்வம், ஆதி வள்ளியப்பன், வெரோனிகா ஏஞ்சல் ஆகியோர் தமிழில் மொழிபெயர்த் திருக்கிறார்கள். நல்ல தாளில், வண்ணப் படக்கதையாக வெளிவந்திருக்கும் இந்த நூல் சிறார்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
வெளியீடு: பிரதம் புக்ஸ், தொடர்புக்கு: 91 8042052574 https://shorturl.at/74Pkr