டிங்குவிடம் கேளுங்கள்: உலகில் எத்தனை நாடுகள், தீவுகள் உள்ளன?

டிங்குவிடம் கேளுங்கள்: உலகில் எத்தனை நாடுகள், தீவுகள் உள்ளன?
Updated on
1 min read

உலகில் எத்தனை நாடுகள், தீவுகள் உள்ளன? 2025 சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும்போது, நான் உன்னைச் சந்திக்கலாமா டிங்கு? - பி. பிரித்விராஜ், யூகேஜி, ஸ்ரீ சாரதா பள்ளி, தூத்துக்குடி.

உங்கள் கேள்வி எளிதாக இருந்தாலும் பதிலை எளிதாகவோ உறுதியாகவோ சொல்லிவிட முடியாது. ஏனென்றால் சில நாடுகளை மற்ற நாடுகளோ ஐக்கிய நாடுகளின் சபையோ அங்கீகரிப்பதில்லை. ஐ.நா.வின் அங்கீகரிப்பை நாம் ஏற்றுக்கொண்டோம் என்றால், 195 நாடுகள் இருக்கின்றன.

இவற்றில் 193 நாடுகள் உறுப்பு நாடுகள், வாடிகனும் பாலஸ்தீனமும் பார்வையாளர் நாடுகள். அதாவது இந்த இரண்டு நாடுகள் ஐ.நா.வின் கூட்டங்களில் பங்கேற்க முடியும், தீர்மானங்களில் வாக்களிக்க இயலாது. ஐ.நா. அங்கீகரிக்காத நாடுகளை வேறு சில அமைப்புகள் அங்கீகரிக்கின்றன. அவர்களின் கணக்குப்படி மொத்தம் 237 நாடுகள் வரை இருக்கின்றன.

செயற்கைக்கோள்களின் உதவியுடன் இதுவரை 6,70,000 தீவுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இன்னும் கண்டறியப்படாத தீவுகளும் இருக்கலாம், பிரித்விராஜ். சென்னைப் புத்தகக் காட்சிக்கு நீங்கள் வரும்போது தகவல் கொடுங்கள். உங்களைச் சந்திக்க நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

பலா மரத்தில் பால் வடிவது ஏன், டிங்கு? - கே. அனிருத், 5-ம் வகுப்பு, ஊ.ஒ.தொ. பள்ளி, கரூர்.

பலாவில் மட்டுமல்ல பப்பாளி, வேம்பு, ஆல், அத்தி போன்ற மரங்களிலும் கள்ளி, எருக்கு போன்ற செடிகளிலும் பால் வடிகிறது. நீராவிப் போக்கைக் குறைப்பதற்காகத் தாவரங்கள் நீரைத் திட, திரவப் பொருளாக மாற்றி வைத்துக்கொள்கின்றன. தாவரங்களுக்கு இயற்கை வழங்கிய தகவமைப்புதான் இந்தப் பால் வடிதல், அனிருத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in