மாயா பஜார்
இது எந்த நாடு? - 60: ஈஸ்டர் தீவு
கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு.
2. உலகின் மிகப் பெரிய வறண்ட பாலைவனமான அடகாமா, இங்கே இருக்கிறது.
3. இதன் தலைநகர் சாண்டியாகோ.
4. பென்குவின், பெலிகன் பறவைகள் இங்கு அதிகம் இருக்கின்றன.
5. அதிக அளவில் திராட்சை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இதுவும் ஒன்று.
6. இங்குள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் மிகப் பெரிய எரிமலைகள் இருக்கின்றன.
7. கரன்சி பேசோ.
8. உலகின் மொத்த தாமிரத் தயாரிப்பில் நான்கில் ஒரு பங்கு இங்கிருந்து கிடைக்கிறது.
9. இங்குள்ள ஈஸ்டர் தீவில் மிகப் பெரிய மனித முகம் கொண்ட சிலைகள் ஏராளமாக இருக்கின்றன.
10. மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.
விடை: சிலி
