

காலநிலை மாற்றம் குறித்துக் கவலையும் சூழலியல் குறித்து அக்கறையும் கொண்ட சிறார்கள் உலகம் முழுவதும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சந்தோஷி வெங்கட்டும் ஒருவர். 'எர்த் ஹீரோஸ் ஆக்ஷன்' என்கிற அமைப்பை ஆரம்பித்துப் பல்வேறு செயல்பாடுகளைச் செய்துவருகிறார். அவற்றில் ஒன்று. 'தி எர்த் ஹீரோஸ் ஜர்னல்' என்கிற பத்திரிகை.
காலநிலை மாற்றம் என்றால் என்ன, நம் பூமியைக் காப்பாற்றுவது எப்படி என்பதை எல்லாம் புதிர்கள், துணுக்குகள், கேள்வி-பதில்கள், படப்புதிர்கள் வழியாகக் கொடுத்திருக்கிறார். தினமும் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்துக்குத் திறன்பேசி, கணினி, தொலைக்காட்சி (இ ஃபாஸ்டிங்ஷ் போன்றவை இல்லாமல் இருந்தால், மனநலத்துக்கு நல்லது என்பது சிறார்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அவசியமானது. ஓர் இளம் சூழலியலாளரால் உருவாக்கப்பட்ட இந்தப் பத்திரிகை, சூழலியலை மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கி, சிறார்களுக்குப் புரிதலையும் விழிப்புணர்வையும் கொடுக்கும்.
வெளியீடு: bridge connect, தொடர்புக்கு: 86800 12122