

கீ
ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. நிலப்பரப்பில் உலகின் மிகப் பெரிய நாடு. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருக்கிறது.
2. 1917-ம் ஆண்டு மக்கள் புரட்சியால் ஜார் மன்னரின் ஆட்சி அகற்றப்பட்டது. சமூக, பொருளாராத விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
3. புரட்சிக்குப் பின் ஏற்பட்ட பொதுவுடமை அரசாங்கத்தின் முதல் தலைவராக லெனின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
4. மட்ரியோஷிகா பொம்மைகளின் தாயகம்.
5. சைபீரியப் புலி மிகவும் பிரபலமான விலங்கு.
6. தனிம அட்டவணையை (Periodic table of elements) உருவாக்கிய டிமிட்ரி மெண்டெலீவ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.
7. முதலில் விண்வெளியை அடைந்த யூரி ககாரினும் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் வாலண்டீனா தெரஸ்கோவாவும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
8. ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நாட்டினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
9. மரியா ஷரபோவா (டென்னிஸ்), காஸ்பரோவ் (செஸ்) போன்ற உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
10. தனது ஆதர்ஸ எழுத்தாளராக காந்தி கருதிய எழுதிய லியோ டால்ஸ்டாயும் இந்த நாட்டுக்கார்தான்.
விடை: ரஷ்யா