டிங்குவிடம் கேளுங்கள்? - வளர்ப்பு நாய் கடிப்பது ஏன்?

டிங்குவிடம் கேளுங்கள்? - வளர்ப்பு நாய் கடிப்பது ஏன்?

Published on

வளர்ப்பு நாய்கள்கூட ஏன் கடிக்கின்றன, டிங்கு? - என். அனிதா குமாரி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

நகரங்களில் இப்போது வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அந்த நாட்டு நாய்கள் நம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தி வாழ்வதில் சிக்கல் இருக்கலாம். உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்போது யாரையாவது கடிக்கும் சூழல் உருவாகலாம்.

அப்படி அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக இப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது. நாய் வளர்ப்பதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும், வெளியில் நாயை அழைத்துச் செல்லும்போது நாய்க்கு முகக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்க வேண்டும், நாய்க்குத் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும்...

இப்படி இன்னும் பல. நாயை வளர்ப்பவர்களும் பிறருக்கு நாயால் தொந்தரவு வராமல் கவனமாக நாயைக் கையாள வேண்டும். நாமும் முன்பின் பழக்கமில்லாத நாய்களிடம் நெருங்கிச் செல்லாமல் இருப்பது நல்லது, அனிதா குமாரி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in