இது எந்த நாடு? 46: மேரி க்யூரியின் நாடு

இது எந்த நாடு? 46: மேரி க்யூரியின் நாடு
Updated on
1 min read

கீ

ழே உள்ள 10 குறிப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிக்கின்றன. அந்த நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ஐரோப்பாவில் உள்ள இந்த நாட்டின் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசும் உள்ளன.

2. ஏரிகள் அதிகம் உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. சுமார் 10 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன.

3. தலைநகர் வார்சா.

shutterstock_242816158right

4. பொலோனியம், ரேடியம் என்ற இரு தனிமங்களைக் கண்டறிந்து, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி இந்த நாட்டைச் சேர்ந்தவர்.

5. இந்த நாட்டின் தேசியச் சின்னம் வெள்ளைக் கழுகு.

6. ஐரோப்பிய எருது இந்தக் கண்டத்தின் அதிக எடை கொண்ட விலங்கு.

7. அதிக பறவை சரணாலயங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன.

8. உருளைக்கிழங்கு, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிகம் விளைவதால் எதிர்காலத்தில் இந்த நாடு ‘ஐரோப்பாவின் தானியக் கூடை’ ஆக இருக்கும் என்கிறார்கள்.

9. தேசியக் கொடியின் மேல் பாதி வெள்ளையாகவும் கீழ்ப் பாதி சிவப்பாகவும் இருக்கும்.

10. மேம்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கு, குண்டு துளைக்காத ஆடை போன்றவை இந்த நாட்டினரின் கண்டுபிடிப்புகள்.

விடை: போலந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in